“நேராக ஆஸ்பத்திரி வாசல் வரை சென்ற பேருந்து…” சாதுர்யமான செயலால் உயிரைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர்…! குவியும் பாராட்டுகள்…!!

By Devi Ramu on புரட்டாதி 6, 2026

Spread the love

கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று துமகூருவில் இருந்து மதுகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்து வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபோது, பயணி ஒருவருக்குத் திடீரெனக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது.

அந்த பயணி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு துடித்ததைக் கண்ட சக பயணிகளும், பேருந்து ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட KSRTC பேருந்து ஓட்டுநர், சிறிதும் தாமதிக்காமல் பேருந்தை உடனடியாக அருகில் இருந்த சாச்சி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நோக்கியத் திருப்பி, நேராக மருத்துவமனை நுழைவாயிலிலேயே கொண்டு போய் நிறுத்தினார்.

   

ஓட்டுநரின் இந்தச் சாதுர்யமான மற்றும் மனிதநேயமிக்க செயலால், அந்தப் பயணி உடனடியாக மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று உயிர் தப்பினார். சொந்தப் பொறுப்பையும் பயண நேரத்தையும் கடந்து, ஒரு மனித உயிரைக் காப்பாற்றத் துரிதமாகச் செயல்பட்ட அந்த அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு இணையத்திலும் சமூகத்திலும் பாராட்டுகள் பெருமளவில் குவிந்து வருகின்றன.