தமிழக நகராட்சி நிர்வாகத் துறை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். டெண்டர் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் போது, வழக்கு தொடர்பான 241 முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி கைப்பற்றியுள்ளனர். தற்போது இந்த ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினர், அதன் அடிப்படையில் விரைவில் இருவருக்கும் முறைப்படி சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் திடீர் சோதனையும், அதைத் தொடர்ந்து தீவிரமடைந்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளையும், லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த நடவடிக்கைகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்து கே.என்.நேரு தனது வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக எடுக்கப்படவுள்ள சட்டப் போராட்டங்கள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
