வைரல் வீடியோ: “அடியே கேக்கு அவனுக்கு ஆப்பு எனக்கா” காதலிக்காக பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாடிய காதலன்… கடைசி நேரத்தில் பயங்கர டுவிஸ்ட்..!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love
தன் காதலியின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட ஒரு இளைஞன் மிகப்பெரிய ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையில், அந்த விழா எதிர்பாராத மோதலில் முடிந்தது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, கேக் வெட்டிய காதலி அதன் முதல் கேக் துண்டை தன் காதலனுக்குக் கொடுக்காமல், அங்கிருந்த நண்பர் ஒருவருக்குக் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன், அனைவர் முன்னிலையிலும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஆத்திரத்தின் உச்சியில், தான் செய்திருந்த அலங்காரங்கள் மற்றும் விழா ஏற்பாடுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி அழித்துள்ளார். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்தச் சிறு பிணக்கு, ஒரு பிரம்மாண்ட விழாவையே பாழாக்கியது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.