5 நிமிட பாடல் காட்சிக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகை – தலை சுத்திப்போன ரசிகர்கள்!

By Elango on மார்கழி 25, 2025

Spread the love

பாலிவுட் நடிகைகளில் உச்சத்தில் இருப்பவர் நோரா பதேஹி. கனடாவில் இருந்து 5 ஆயிரம் ரூபாயுடன் இந்தியாவுக்கு வந்த இவர் இப்போது 5 நிமிட பாடல் காட்சியில் நடனமாட 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் பல அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்த அவர் இன்று நட்சத்திர நாயகியாக பாலிவுட்டில் வலம் வருகிறார்.

பாலிவுட்டில் தனது பயணத்தை தொடங்கிய நோரா பதேஹி பிறகு தென்னிந்திய சினிமாவிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஒரு பாடலுக்கு நடனமாடுவதில் நோரா பிரபலமானார். டெம்பர் பாகுபலி தோழா போன்ற படங்களில் அவர் நடனம் ஆடியிருக்கிறார்.

   

அடுத்து வர உள்ள ஜெயிலர் 2 படத்திலும் தமன்னா போல இவர் ஐட்டம் பாடலுக்கு குத்தாடம்ட ஆடியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஒரு பாடலுக்கு நடனமாட 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மேலும் சமீபத்தில் இவர் மும்பையில் கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.