பொங்கு சனியால் பொங்கப் போகுது அதிர்ஷ்டம்… இனி இந்த 5 ராசிகளுக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது!

By Elango on மார்கழி 25, 2025

Spread the love

சனி பகவானின் சாதகமான கஞ்சாரத்தால் 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப் போகிறது. பொங்கு சனியின் அருளால் தொழில் உத்தியோகம் மற்றும் சொத்துக்கள் மூலம் எதிர்பாராத பொருளாதார உச்சத்தை அடைவார்கள். நவகிரகங்களின் நீதிமானாகவும் கர்மவினைக்கு ஏற்ப பலன்களை வழங்குபவராகவும் திகழும் சனி பகவான் 2026ம் ஆண்டில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வாரி வழங்கப் போகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் சனி சாதகமான இடத்தில் அமரும்போது பொங்கு சனியாக மாறி குபேர சம்பத்தை வாரி வழங்குகிறார். வரும் புத்தாண்டில் சனி பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியில் சஞ்சரிப்பதும் அதன் பிறகு நிகழப்போகும் பெயர்ச்சிகளும் மேஷம் ரிஷபம் மிதுனம் சிம்மம் மற்றும் கும்பம் ஆகிய 5 ராசிகளுக்கு எதிர்பாராத பொருளாதார வளத்தை தரப்போகிறது.

   

மேஷம் – பெரிய பதவிகளும் சம்பள உயர்வு தேடி வரும். மேஷ ராசியை பொறுத்தவரை சனி பகவான் லாப ஸ்தானமான 11ம் வீட்டில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். அதனால் லாப சனியாக செயல்பட்டு கஷ்டங்களுக்கு தீர்வு கொடுப்பார். இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அசையும் சொத்துக்கள் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

   

மிதுனம் – பலமடங்கு லாபம் கிடைக்கும். மிதுன ராசியினருக்கு 9ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சனி அமர்வது பாக்கிய சனி என்ற நிலையை உருவாக்குகிறது. பூர்வீக சொத்துக்கள் மூலம் திடீர் பணவரவு உண்டு. வெளிநாடு சென்று பொருளீட்டும் வாய்ப்புகள் உள்ளன.

 

சிம்மம் – வங்கி இருப்பு கணிசமாக உயரும். சிம்ம ராசியினருக்கு 7ம் இடத்தில் சனி இருந்தாலும் குருவின் பார்வையும் இதர சுப கிரகங்களின் சேர்க்கையும் மகா யோகத்தை அள்ளித் தரப் போகிறது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும். வங்கி இருப்பு கணிசமாக உயரும். தொழில் அதிபராக உருவெடுக்கும் காலம் உருவாகும்.

கும்பம் – எட்டாத உயரத்தை தொடுவார்கள். கும்ப ராசியில் தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனி பகவான் ஜென்ம சனியாக இருந்தாலும் சச மகா யோகத்தை வழங்குகிறார். சனி தனது சொந்த வீட்டில் பலமாக இருப்பதால் இந்த ராசியினருக்கு பொறுமையும் உழைப்பும் சேரும் போது எட்டாத உயரத்தை தொடுவார்கள். வீடு நிலம் வாகனச் சேர்க்கை என்று பொருளாதார ரீதியாக உச்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது. பெரும் செல்வம் வந்து சேரும்.

ரிஷபம் – இந்த ராசிக்கு கோடீஸ்வரருக்குரிய வாழ்க்கை முறை அமையும். ரிஷப ராசிக்கு 10ம் வீடான கர்ம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். ரிஷபத்திற்கு சனி யோகக்காரன் என்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய பதவிகளும் சம்பள உயர்வும் தேடி வரும். புதிய ஆர்டர்கள் குவியும். சமுதாயத்தில் அந்தஸ்து கௌரவம் உயர்ந்து ஒரு கோடீஸ்வரருக்கு உரிய வாழ்க்கை முறை இவர்களுக்கு அமையும். வரும் புத்தாண்டில் இந்த 5 ராசிகளுக்கும் பொங்கு சனியால் வாழ்க்கை சுபிட்சமாக மாறும்.