தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு இந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியாக அனிருத் இசையமைத்து வருகிறார். 35 வயதுகள் கடந்த நிலையில் இன்னும் அனிருத்துக்கு திருமணம் ஆகவில்லை. ரசிகர்கள் பலரும் அவரது திருமணம் எப்போது தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற அனிருத்தின் அப்பா நடிகர் ரவி ராகவேந்தர் அனிருத் திருமணம் குறித்து பேசி இருக்கிறார்.
அப்போது அவர் கூறியதாவது, இன்று எந்தப் பையன் தனது அப்பா அம்மாவிடம் வந்து, நீங்கள் எனக்கு பெண் பாருங்கள் என்று சொல்கிறான் என்று சிலர் சொல்லலாம். பல பெற்றோர்களிடம் பிள்ளைகள் அதுபற்றி கேட்பதில்லை. திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறார்கள் தவிர, நான் செய்து கொள்ளவா நீங்கள் பெண் பார்க்கிறீர்களா என்றெல்லாம் கேட்பதில்லை. இதில் அனிருத் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என ரவி ராகவேந்தர் கூறியிருக்கிறார்.
