பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டத்தில் இரண்டு இளம்பெண்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்ட விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு இல்லை என்றும், அதனால் ஒருவருக்கொருவர் துணையாக இணைந்து வாழ விரும்புவதாகவும் அந்தப் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இந்து முறைப்படி அக்னி சாட்சியாகத் திருமணம் நடைபெறும். ஆனால், இந்த இளம்பெண்கள் தங்கள் வீட்டில் இருந்த ‘கேஸ் ஸ்டவ்’ எனப்படும் எரிவாயு அடுப்பையே அக்னியாகக் கருதி, அதனைச் சுற்றி ஏழு முறை வலம் வந்து (சப்தபதி) திருமணச் சடங்குகளைச் செய்துள்ளனர். இந்த வினோதமான திருமணச் செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
