மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த விஜய் குமார் சாஹ்னி என்பவர், 2012-ம் ஆண்டு முதல் பிரியா ஷெட்டி (35) என்ற பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், விஜய் தனது முதல் திருமணத்தை மறைத்து 2014-ம் ஆண்டு சந்தியா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த பிரியா, தன்னை முறைப்படி திருமணம் செய்துகொண்டு தனது சொந்த ஊரான கோரக்பூருக்கு அழைத்துச் செல்லுமாறு விஜய்க்கு அழுத்தம் கொடுத்துள்ளார்
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 26-ம் தேதி விஜய் தனது மனைவி சந்தியா மற்றும் பிரியா ஆகிய இருவரையும் மும்பையிலிருந்து கோரக்பூருக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு ஜனவரி 29-ம் தேதி இரவு, மதுபோதையில் இருந்த பிரியாவை விஜய்யும் அவரது மனைவி சந்தியாவும் இணைந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
அடையாளம் தெரியாமல் இருக்க பிரியாவின் முகத்தைச் சிதைத்து, உடலை நிர்வாணமாக்கி பிபி கஞ்ச் அருகே உள்ள பாலத்தின் அடியில் வீசியுள்ளனர். கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில், கோரக்பூர் போலீசார் விஜய், அவரது மனைவி சந்தியா மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த விஜய்யின் மாமனார் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…