ராஜஸ்தான் மாநிலத்தில் 10 வயது சிறுவன் ஒருவன், தான் முற்பிறவியில் ஆம்பர் (ஆமேர்) கோட்டையை ஆண்ட புகழ்பெற்ற மன்னர் முதலாம் மான்சிங் என்று கூறி வருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டோங்க் மாவட்டத்தைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவனான கன்ஹாராம் பைர்வா (10), தனது முற்பிறவி நினைவுகள் குறித்துப் பேசி அந்தப் பகுதியையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சிறுவனின் பெற்றோர் கூறுகையில், அவனுக்கு இரண்டரை வயதிலிருந்தே மாற்றங்கள் தெரிய ஆரம்பித்ததாகத் தெரிவிக்கின்றனர். அவனது தாய் கியார்சி தேவி கூறுகையில், சிறுவன் முதன்முதலில் பேசிய வார்த்தையே ‘ராஜா மான்சிங்’ என்பதுதான் என்றும், அவன் தன்னை ஒரு ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த மன்னராகவே கருதி சாதாரண பாத்திரங்களில் உணவு உண்ண மறுப்பதோடு, வீட்டில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்து வருவதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
ஆம்பர் கோட்டையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள புதையல்கள் மற்றும் புகழ்பெற்ற சிலாதேவி கோயிலின் வரலாறு குறித்து அச்சிறுவன் கூறும் தகவல்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தான் ஹல்திகாட்டி போரில் போரிட்டதாகவும், சிலாதேவி சிலையை வங்காளத்திலிருந்து கொண்டு வந்ததாகவும் அவன் கூறுகிறான். இருப்பினும், மன்னர் மான்சிங் இறந்த இடம் குறித்த அவனது கூற்றுக்கும் வரலாற்றுத் தரவுகளுக்கும் இடையே சில முரண்பாடுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) நிறுவனத்தில் 180 இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு…
இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் பயணிகளின் 'வெயிட்டிங் லிஸ்ட்' டென்ஷனைக் குறைக்க, முன்பதிவுப் பட்டியல் (Chart) தயாரிக்கும் முறையில் புதிய…
ஆதாரில் பயோமெட்ரிக் தகவல்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 5…
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 11 இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு…
சமையலறையில் தொல்லை தரும் ஈக்கள், எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட வெங்காயம் மற்றும் பேக்கிங் சோடா கலந்த எளிய…
கோடை காலத்தின் உஷ்ணத்தைத் தணிக்கும் இயற்கை வரப்பிரசாதமான தர்பூசணி, வெறும் தாகம் தீர்க்கும் பழம் மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும்…