இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் பயணிகளின் ‘வெயிட்டிங் லிஸ்ட்’ டென்ஷனைக் குறைக்க, முன்பதிவுப் பட்டியல் (Chart) தயாரிக்கும் முறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முதல் பட்டியல், முந்தைய நாள் இரவு 8 மணிக்கே வெளியிடப்படும். மதியம் 2 மணிக்கு மேல் கிளம்பும் ரயில்களுக்கு, அது புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பாகவே பட்டியல் தயாராகிவிடும்; இதன் மூலம் டிக்கெட் உறுதி செய்யப்படாத பயணிகள் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்த்து, முன்கூட்டியே மாற்றுத் திட்டங்களைச் செய்ய உதவியாக இருக்கும்.
முதல் பட்டியல் வெளியான பிறகு யாராவது டிக்கெட்டை ரத்து செய்தால், அந்த இடம் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இறுதிப் பட்டியல் (Second Chart) தயாரிக்கப்படும்; இதில் தட்கல் முறையில் காலியாக இருக்கும் இடங்களும் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த வசதியால் கடைசி நிமிடத்தில் பயணம் ரத்து செய்யப்படுவதைக் குறைக்க முடியும் என்றும், பயணிகள் தங்களது டிக்கெட் நிலையை ஐஆர்சிடிசி (IRCTC) செயலி மூலம் எளிதாகக் கண்காணிக்கலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…
குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்துப் பரவி வரும் விவாகரத்து வதந்திகளுக்கு விஜய்யின் தந்தை எஸ். ஏ.…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்கு உருக்கமான கடிதம்…
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…