10 வருடங்களுக்குப் பிறகு தம்பதியினருக்கு கடவுள் கொடுத்த மகிழ்ச்சியை அவரே பறித்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் பகிரத்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஐந்து மாத குழந்தை தூய்மையற்ற குடிநீரால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளது. தாய்க்கு தாய்ப்பால் சுரக்காத நிலையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி பவுடர் பாலில் நர்மதா குழாய் நீரை கலந்து கொடுத்து வந்துள்ளனர். அவர்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்திய அந்த நீர் விஷமாக மாறி பல வருட பிரார்த்தனைக்கு பிறகு பிறந்த அந்த குழந்தையின் உயிரைப் பறித்துள்ளது.
குழந்தையின் தந்தை சுனில் தன் மகனுக்கு காய்ச்சலும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டபோது அது சாதாரண உபாதை என்று கருதியுள்ளார். மாசடைந்த நீர் குறித்த எந்த எச்சரிக்கையும் அதிகாரிகளால் வழங்கப்படாத நிலையில் வழக்கம் போல தண்ணீரை வடிகட்டியே பயன்படுத்தியுள்ளனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலைமை மோசமாகி திங்கட்கிழமை காலை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்து உள்ளது. இந்தூரில் மாசடைந்த நீரால் உயிரிழந்த பலரில் குழந்தையும் தற்போது இடம் பெற்றுள்ளது வேதனை அளிக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளியூர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு காத்திருந்த ஆச்சரியமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்கள்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…
சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…