ஜெய்ப்பூரில் தனது தாத்தா பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்த தீர் என்ற சிறுவன், தந்தையுடன் காரில் செல்லும்போது சன்ரூஃப் (Sunroof) வழியாகத் தலையை வெளியே நீட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காற்றில் பறந்து வந்த பட்டத்தின் ‘மாஞ்சா’ கயிறு கழுத்தை அறுத்ததில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். பெற்றோரின் ஒரே மகனான தீரின் இந்த மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியச் சாலைகளில் பாதுகாப்பற்ற முறையில் சன்ரூஃப் வழியாகக் குழந்தைகள் தலையை நீட்டி விளையாடும் கலாச்சாரம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. வளர்ந்த நாடுகளின் பழக்கவழக்கங்களை அப்படியே பின்பற்றும் அதே வேளையில், நம் நாட்டின் சூழலுக்கு அது பாதுகாப்பானதா என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். ஒரு கண நேர மகிழ்ச்சி வாழ்நாள் முழுவதும் ஆறாத வடுவை ஏற்படுத்திவிடும் என்பதால், காரில் பயணிக்கும்போது குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
