அடச்சீ..! பொதுக் கழிப்பறையில் அசிங்கம்… நாய்க்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்… பார்த்ததும் அதிர்ந்துபோன போலீசார்…!!

By Soundarya on தை 21, 2026

Spread the love

மும்பை மலாட் கிழக்கு பகுதியில் உள்ள குரார் கிராமத்தில், இரண்டரை மாத நாய்க்குட்டியை 20 வயது இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகத் தாக்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. விலங்கு நல அமைப்பான ‘பிஏஎல்’ (PAL) அறக்கட்டளை இது தொடர்பான வீடியோவைப் பகிர்ந்ததை அடுத்து, இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு பொதுக் கழிப்பறைக்குள் இந்த அராஜகத்தில் ஈடுபட்டபோது, விலங்கு ஆர்வலர்கள் மற்றும் மும்பை காவல்துறையினர் அங்கு விரைந்தனர். முதலில் கதவைத் திறக்க மறுத்த அந்த இளைஞனை, போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அரை நிர்வாண நிலையில் கையும் களவுமாகப் பிடித்தனர். அங்கிருந்த பொதுமக்களின் கடும் கண்டனங்களுக்கு மத்தியில் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.