உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜில், இளம்பெண் ஒருவரை ரகசியமாகப் புகைப்படம் எடுத்து, அதனை ஆபாசமான வாசகங்களுடன் (Objectionable Tag) சக ஊழியருக்குப் பகிர்ந்த பயிற்சிப் பணியாளர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த அந்தப் பெண், சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் சந்தித்து ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
A woman in #Kannauj was seen confronting two trainees after discovering that one of them had secretly taken her photograph and allegedly shared it with another trainee using an objectionable tag.
The incident came to light after a video of the confrontation went viral, followed… pic.twitter.com/VFfLa8OGbT
— Hate Detector 🔍 (@HateDetectors) January 21, 2026
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பயிற்சிப் பணியாளர் தனது செயலை ஒப்புக்கொண்டு, அந்தப் பெண்ணிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் மற்றொரு வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பெண்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளது.
