“விஜய்க்கு ஆதரவு.. ஆனா ஒரு கண்டிஷன்!”… சட்டப்பேரவையில் வன்னி அரசு போட்ட அதிரடி ‘செக்’… ஆடிப்போன தவெக…!!!

Spread the love

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தத் துடிக்கும் பாஜகவின் மறைமுகச் சதியை முறியடிக்கவே, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக வன்னி அரசு தெரிவித்தார். மதச்சார்பற்ற கட்சிகளின் துணையோடு அமைந்துள்ள இந்த அரசு, ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்க வேண்டும் என வாழ்த்திய அவர், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் புதிய அரசு எந்தவித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை சதியை முறியடித்ததை முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டினார். அதேபோன்றதொரு உறுதியான நிலைப்பாட்டை மாநில உரிமைகள் சார்ந்து தவெக அரசு எடுக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசுக்கு அடிபணியாமல் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அறிவியல் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட வன்னி அரசு, ஜோதிடம், பில்லி சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இந்த அரசு இடம் கொடுத்துவிடக் கூடாது என எச்சரித்தார். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருப்பதைப் போல, தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் எனப் புதிய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

இறுதியாக, சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஏற்கெனவே திமுக அரசு கொண்டு வந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, ‘ஆணவக் கொலை சிறப்புத் தடுப்புச் சட்டத்தை’ உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தவெக அரசை வன்னி அரசு கேட்டுக்கொண்டார்.

Muthu Mani

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago