எதுக்கும் லாயக்கு இல்ல “15 நாட்களில் நீ என்ன வேலை செஞ்ச..?” ஊழியரை சக ஊழியர்கள் முன்னிலையில் திட்டிய வங்கி மேலாளர்… “பணியிடத் துன்புறுத்தலின் உச்சக்கட்டம்” கொந்தளிக்கும் இணையவாசிகள்..!

Spread the love

ஐசிஐசிஐ வங்கியின் ரீஜினல் மேலாளர் ஒருவர் தனது ஊழியரைச் சக ஊழியர்கள் முன்னிலையில் கொடூரமாக அவமானப்படுத்தும் காணொளி மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.  அந்த மேலாளர் ஊழியரைப் பார்த்து, “கடந்த 15 நாட்களில் நீ என்ன வேலை செய்திருக்கிறாய்? பயனில்லாதவன்” என்பது போலப் பேசியுள்ளார். மேலும் வேலை செய்யாமல் வந்து வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டார். வேலை செய்ய விரும்பவில்லை என்றால் ராஜினாமா செய்யுமாறு கூறப்பட்டார். மிகவும் இழிவான முறையில் வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம், தனியார் வங்கிகளில் நிலவும் Toxic work culture  மற்றும் ஊழியர்கள் மீதான கடுமையான பணிச்சுமை குறித்த விவாதங்களைத் மீண்டும் கிளப்பியுள்ளது. பல ஊழியர் குழுக்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்கள், இது போன்ற நடத்தை பணியிடத் துன்புறுத்தலின் உச்சக்கட்டம் என்று விமர்சித்துள்ளனர்.  இந்தக் காணொளி வெளியான பிறகு, பல நெட்டிசன்கள் ரிசர்வ் வங்கி மற்றும் தொழிலாளர் அமைச்சகம் உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகளுக்குத் தங்கள் கோபத்தைத் தெரிவித்து, வங்கி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

பெரும் சர்ச்சைக்குப் பிறகு, இந்த விவகாரம் குறித்து ஐசிஐசிஐ வங்கி விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இது ஐசிஐசிஐ வங்கியில் மட்டும் நடக்கும் சம்பவம் அல்ல, பிற தனியார் வங்கிகளிலும் இதுபோன்ற பணிச்சுமை மற்றும் ஊழியர்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் நடப்பதாகப் பல முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்

Soundarya

Recent Posts

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

18 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

41 minutes ago

“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…

54 minutes ago

பகீர்.. மரணக் குவியலாக மாறிய லக்னோ கட்டிடம்… கொளுந்துவிட்டு எரிந்த தீயில் 14 உயிர்கள் சாம்பல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…

54 minutes ago

ச்சீ.. பெற்ற தாய் என்றும் பாராமல்… வெளிநாடு செல்ல ரூ.20 லட்சம் கேட்டு… கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கிய மகன்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…

1 மணத்தியாலம் ago

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

1 மணத்தியாலம் ago