ஐசிஐசிஐ வங்கியின் ரீஜினல் மேலாளர் ஒருவர் தனது ஊழியரைச் சக ஊழியர்கள் முன்னிலையில் கொடூரமாக அவமானப்படுத்தும் காணொளி மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அந்த மேலாளர் ஊழியரைப் பார்த்து, “கடந்த 15 நாட்களில் நீ என்ன வேலை செய்திருக்கிறாய்? பயனில்லாதவன்” என்பது போலப் பேசியுள்ளார். மேலும் வேலை செய்யாமல் வந்து வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டார். வேலை செய்ய விரும்பவில்லை என்றால் ராஜினாமா செய்யுமாறு கூறப்பட்டார். மிகவும் இழிவான முறையில் வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டார்.
💥ABSOLUTE SHOCKER FROM ICICI BANK💥
Watch how a RM at @ICICIBank brutally humiliates a staff member in front of everyone demanding “what business have you done in the last 15 days?” and calling them out like they’re worthless.
– Accused of doing nothing but coming to enjoy
-… pic.twitter.com/Y3CSFfcisP— Nitin Tyagi (@iNitinTyagi) December 10, 2025
இந்தச் சம்பவம், தனியார் வங்கிகளில் நிலவும் Toxic work culture மற்றும் ஊழியர்கள் மீதான கடுமையான பணிச்சுமை குறித்த விவாதங்களைத் மீண்டும் கிளப்பியுள்ளது. பல ஊழியர் குழுக்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்கள், இது போன்ற நடத்தை பணியிடத் துன்புறுத்தலின் உச்சக்கட்டம் என்று விமர்சித்துள்ளனர். இந்தக் காணொளி வெளியான பிறகு, பல நெட்டிசன்கள் ரிசர்வ் வங்கி மற்றும் தொழிலாளர் அமைச்சகம் உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகளுக்குத் தங்கள் கோபத்தைத் தெரிவித்து, வங்கி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
பெரும் சர்ச்சைக்குப் பிறகு, இந்த விவகாரம் குறித்து ஐசிஐசிஐ வங்கி விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இது ஐசிஐசிஐ வங்கியில் மட்டும் நடக்கும் சம்பவம் அல்ல, பிற தனியார் வங்கிகளிலும் இதுபோன்ற பணிச்சுமை மற்றும் ஊழியர்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் நடப்பதாகப் பல முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்
