கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் பகுதியில் அரசு உருது பள்ளி ஒன்று உள்ள நிலையில் அங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றன. அந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவிக்கு அவருடைய வகுப்பு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த ஆசிரியர் மாணவிக்கு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் அவருடைய தொல்லையை தாங்க முடியாத மாணவி இது தொடர்பாக நான் பெற்றோரிடம் கூறி விடுவேன் என்று ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த ஆசிரியர் அவ்வாறு செய்தால் தன்னுடைய வகுப்புக்கு வர முடியாது எனவும் தனது பாடத்தில் தேர்ச்சி அடைய முடியாது என்றும் கூறி மாணவியை மிரட்டி உள்ளார். அதுமட்டுமல்லாமல் பள்ளி முடிந்ததும் தான் கூறும் இடத்திற்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு மறுத்த மாணவியை அந்த ஆசிரியர் அடிவயிற்றில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாணவி இந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் கூறிய நிலையில் ஆத்திரமடைந்த பெற்றோர் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் பள்ளிக்குச் சென்று ஆசிரியரை வெளியே இழுத்து தர்ம அடி கொடுத்தனர்.
அத்துடன் அவருடைய சட்டையை கிழித்து எறிந்தனர். பிறகு அவருக்கு செருப்பு மாலை அணிவித்து பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே அழைத்து வந்து சரமாரியாக தாக்கியதுடன் ஊர்வலமாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஜெகதீஷ் (39) மீது நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
