“சினிமால இருந்து வந்துட்டு.. CM விஜய்யை வம்புக்கு இழுத்த திமுக பிரமுகர்”…. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு பின்னால் இருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ அரசியல்..!

Spread the love

கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் குறித்து கடுமையான சொற்களால் விமர்சித்தார். சினிமாவில் இருந்து விஜய் அரசியலுக்கு வந்ததை கிண்டல் செய்த அவர், சட்டமன்றத்தில் முதல்வர் அமர்ந்திருந்த விதம் மற்றும் முகபாவனைகளை ஒருமையில் விமர்சித்ததோடு, தவறான இரட்டை அர்த்தம் கொண்ட பழமொழிகளையும் பயன்படுத்திப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த அவதூறு பேச்சைத் தொடர்ந்து, தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பொது அமைதியைக் குலைத்தல் மற்றும் மோதலைத் தூண்டுதல் (பி.என்.எஸ் பிரிவுகள் 352, 353(2)) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறையினர் தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யக்கூடும் என்பதால், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசின் மீதான மக்களின் அதிருப்தியை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்ற முறையிலேயே தான் வெளிப்படுத்தியதாகவும், இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், இது அரசின் நிர்வாகக் குறைபாடு குறித்த பேச்சு மட்டுமே என்றும், தனிப்பட்ட விமரிசனம் இல்லை என்றும் வாதிடப்பட்டது. ஆனால், காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவருக்கு பொதுவெளியில் பேசும் விபரம் தெரியவில்லை என்று கூறி முன்ஜாமீனுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் பொதுவெளியில் தகுதியோடு பேச வேண்டும்; எந்த முதலமைச்சரையும் அவதூறாகப் பேசக் கூடாது” எனக் கூறி அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தால் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. தூத்துக்குடி ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு ஆய்விற்காகச் சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை, அங்கு வந்த காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். முதல்வர் விஜய் குறித்த இந்த அவதூறு பேச்சும், அதனைத் தொடர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினரின் கைதும் தமிழக அரசியல் களத்தில் தற்போது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

11 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

23 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

49 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

56 minutes ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

60 minutes ago

பருமன் உள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வேகமாகப் பரவுவது ஏன்…? மருத்துவ உலகையே உலுக்கிய புதிய கண்டுபிடிப்பு… ஆய்வின் வெளியான அதிர்ச்சி தகவல்…!

உடல் பருமன் என்பது வெறும் தோற்றம் சார்ந்த விஷயம் அல்ல; அது நீரிழிவு, இதய நோய் போன்றவற்றுடன் சில வகையான…

1 மணத்தியாலம் ago