பயங்கர அதிர்ச்சி..! மூளை காய்ச்சலால் கோமாவுக்கு சென்ற ஆஸி., கிரிக்கெட் வீரர்…!!

By Soundarya on மார்கழி 31, 2025

Spread the love
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேமியன் மார்ட்டின் (54), மூளைக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது சக வீரர்கள், கிரிக்கெட் உலகம் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலியாவுக்காக 67 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 1999 மற்றும் 2003 உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கியப் பங்கு வகித்தவர் ஆவார்.
இந்நிலையில், டேமியனின் உடல்நிலை குறித்த தகவல்களை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வெளியிட்டு வருகின்றனர். முன்னாள் ஆஸ்திரேலிய கால்பந்து வீரரான பிராட் ஹார்டி, ஒரு வானொலி நிகழ்ச்சியில் மார்ட்டினின் உடல்நிலை குறித்துப் பேசியுள்ளார். மார்ட்டினின் குடும்பத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும், அவர் இந்தப் போராட்டத்தில் இருந்து மீண்டு வருவார் என்று நம்புவதாகவும் ஹார்டி தெரிவித்துள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.