பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெறும் பொருள்கள்… வெளியானது லிஸ்ட்… தமிழக அரசு வெளியிடப்போகும் அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 31, 2025

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த சில வருடங்களாக ரொக்க பணம் வழங்கப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு அரசு ரொக்க பணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, ஏலக்காய், வெல்லம், முந்திரி, திராட்சை மற்றும் நெய் உள்ளிட்டவை இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் மூவாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.