பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல் – அடடா… அந்த சான்ஸை மிஸ் பண்ணிட்டாங்களே?

By Elango on மார்கழி 31, 2025

Spread the love

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் இசை வௌியீட்டு விழா குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. வருகிற 3ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இந்த விழா நடக்க உள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழுவினர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
முதலில் இந்த விழா நேரு உள்விளையாட்டு அரங்கின் வெளிப்புற பகுதியில் நடப்பதாக இருந்தது. இப்போது திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு விழா மலேசியாவில் பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் நடந்தது. ஜனநாயகன் பராசக்தி படங்கள்தான் இப்போது பொங்கல் பண்டிகை களத்தில் மோதுகின்றன. அதனால் நேரு உள்விளையாட்டு அரங்கின் வெளிப்புறம் பராசக்தி பட விழாவும் நடந்திருந்தால், ஏராளமாக மக்கள் பார்வையாளர்களாக வந்திருப்பார்கள். அந்த சான்ஸை படக்குழுவினர் மிஸ் செய்துவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.