சென்னை காசிமேட்டில் மீன்பிடித் தொழில் செய்து வரும் சிவாவுக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த வெண்ணிலாவுக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சிவாவின் அதீத குடிப்பழக்கம் மற்றும் மனைவியை தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தும் குணம் காரணமாக, கணவனின் கொடுமை தாங்க முடியாத வெண்ணிலா, கடந்த ஒரு மாதமாக தனது தாய் தேவியின் வீட்டில் குழந்தைகளுடன் பிரிந்து வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று, வியாசர்பாடியில் உள்ள தனது அக்கா வீட்டில் வெண்ணிலா இருந்தபோது, அங்கு வந்த சிவா அவரிடம் தனியாகப் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். சுமார் அரை மணி நேரம் இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை திடீரென கடுமையான வாக்குவாதமாக மாறியுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சிவா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெண்ணிலாவின் கழுத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் மற்றும் சகோதரி, வெண்ணிலா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவலறிந்த எம்.கே.பி. நகர் காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெண்ணிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சமாதானம் பேசுவது போல் நடித்து மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள சிவாவை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்பப் பிரச்சனை காரணமாக நடந்த இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…