மும்பை வைலே பார்லே (மேற்கு) பகுதியில் உள்ள பாப்டிஸ்டா சாலையில் அமைந்துள்ள 12 மாடி ‘சாந்தா பவன்’ கட்டிடத்தின் 11வது தளத்தில், செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணிளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த மும்பை தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஃப்ளாட் எண்கள் 1101 மற்றும் 1102 ஆகிய வீடுகளில் உள்ள மின் வயரிங், ஏசி யூனிட், மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் வேகமாகப் பரவிய இத்தீயை, தீயணைப்பு வீரர்கள் சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நள்ளிரவு 1 மணியளவில் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சோகமான சம்பவத்தில் இரண்டரை வயதேயான அபீர் என்ற ஆண் குழந்தையும், அங்கிதா (23) என்ற பெண்ணும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இத்தீ விபத்தில் காயமடைந்த ஆறு பேரில் இரு தீயணைப்பு வீரர்கள் உட்பட நால்வர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்; மற்ற இருவர் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 4,000 சதுர அடி பரப்பளவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இத்தீ விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…