செம ஷாக்..! கூட்டணி குறித்து அதிமுகவே முடிவெடுக்கும்…? செக் வைத்த EPS..!

By Soundarya on மார்கழி 11, 2025

Spread the love

நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது, கட்சிகளைச் சேர்ப்பது மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தையும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த அதிகாரத்தின் அடிப்படையில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) எந்தெந்த கட்சிகள் இணையலாம், அவர்களுடன் யார் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதை அதிமுகவே முடிவு செய்யும் என்று நயினார் நாகேந்திரனிடம் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக, தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியே செயல்படும் என்றும், கூட்டணி விவகாரங்களில் அதிமுகவின் முடிவே இறுதியானது என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளதாகத் தெரிகிறது