அரசியலில் பரபரப்பு திருப்பம்… சற்றுமுன் விஜய்க்கு அழைப்பு விடுத்த பாமக… தவெக அலுவலகத்தில் பாமக நிர்வாகிகள்…!

By Nanthini on மார்கழி 11, 2025

Spread the love

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகளின் வருகை பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு பாமக வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் வருகை புரிந்துள்ளனர். பாமக சார்பாக வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி சாதி வாரிய கணக்கெடுப்பு குறித்து நடைபெற உள்ள போராட்டத்திற்கு தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்க அழைப்பு விடுக்க வருகை தந்துள்ளனர்.

அன்புமணி சார்பாக அழைப்பு கடிதத்தை தமிழக வெற்றி கழகம் பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்வாகிகளிடம் வழங்கினர். ஏற்கனவே தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் சார்பாக வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.