தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக விஜயின் அரசியல் நகர்வு உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுகவுக்கு தற்போது பெரும் போட்டியாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி மாறியுள்ளது. விஜய்க்கு மேலும் பலத்தை கூட்டும் வகையில் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்தார். இன்னும் சில அமைச்சர்களை கட்சியில் சேர்க்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உள்ளிட்டோர் விரைவில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து முகநூல் பதிவில் ராஜவர்மன் பதிலளித்துள்ளார். அதில், வீட்டில் பூச்சியை நம்பி கலங்கரை விளக்கை விட்டு எப்படி செல்வேன்? முன்னாள் அமைச்சர் ஒருவரின் தூண்டுதல் பெயரால் இந்த சதி நடந்துள்ளது என கே.டி ராஜேந்திர பாலாஜியை அவர் மறைமுகமாக சாடியுள்ளார்.
