இந்திய தேர்தல் ஆணையம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. அதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 11, 2025 ஆகும். இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் டிட்வா புயல், கனமழை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகப் பல கோரிக்கைகள் எழுந்ததால் இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16, 2025 அன்று வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்த பிறகு வெளியிடப்படும்.
