அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பரப்புரை செய்து வருகிறார் ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்று. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வனவாசி, செய்யாறு தொகுதிகளில் பரப்புரை நடந்தது. பின்பு அதைத் தொடர்ந்து வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் நெசவாளர்களிடம் கலந்து உரையாடினார்.
இதைத்தொடர்ந்து செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே பரப்புரை இருந்தது. அதற்காக தனது வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோதுச் சாலையில் இருந்த அலங்கார வளைவுகளை கடந்து சென்ற சில நொடியில் அலங்கார வளைவு விழுந்து விபத்துக்குள்ளானது. நூலலையில் தப்பிய எடப்பாடி பழனிச்சாமி, பின்வந்த வாகனத்தின் மீது அலங்கார வளைவு விழுந்து விபத்துக்குள்ளானது இதழில் காயமடைந்தோரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
