இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகளவு நடைபெறுகின்றன. பலரும் போக்குவரத்து விதிகளை மீறுவதால் விபத்தில் சிக்குவது என்பது வழக்கமாகிவிட்டது. அதுவே நாம் என்னதான் கவனமாகச் சென்றாலும் சில நேரங்களில் நம்மை மீறி விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விபத்துக்கள் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலையில் சமீபத்தில் இணையத்தில் பரவிய ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில் ஸ்கூட்டரில் சென்ற பெண் ஒருவர் திடீரென்று லாரி மோதியபோதும் அதிசயமாக உயிர் பிழைத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில் சாலையில் நெரிசலாக வாகனங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. அப்போது ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவர் முந்தி செல்ல முயன்ற போது பின்னே வந்த லாரி வேகமாக பாய்ந்து மோதியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் அடிபடாமல் லாரியின் நடுவே விழுந்ததால் உயிர் பிழைத்துள்ளார். பெரிய விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் இந்த காட்சி நம்ப முடியாத அதிர்ஷ்டமாக இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
