தவெக தலைவர் விஜய் அனைத்து வாகனங்களிலும் ஒரே நம்பர்.. என்ன காரணம் தெரியுமா?.. இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கா..??

By Divyamayakannan on புரட்டாதி 13, 2025

Spread the love

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. அனைத்து கட்சியும் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டு வரும் நிலையில் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த நிலையில் இன்று திருச்சியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. அனைத்து வசதிகளும் அடங்கியவாறு பிரச்சார வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள மரக்கடை பகுதி வரை விஜய் அவர்கள் பிரச்சார வாகனத்தில் சென்றார். ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் என இலட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விஜய் அவர்களின் வாகனம் ஊர்ந்து சென்றது.

பிரச்சாரத்தின் வாகனம் அனைத்துமே ஒரே நம்பர் பிளேட் பயன்படுத்திய இருந்தது. 0277 என்ற நம்பரையே பயன்படுத்தி இருக்கிறது. பிஎம்டபிள்யூ இவி காரில் TN 14 AH 0277, லெக்சஸ் எல் எம் காரில் TN 14 AL 0277, டொயோட்டாவில் TN 14 AM 0277 என்ற எண்களை பயன்படுத்தி உள்ளார்களாம். இது மட்டும் இல்லாமல் பிரச்சாரத்தின் வாகனத்திலும் TN 14 AS 0277 என்ற எண்ணை பயன்படுத்தி உள்ளார்கள். இது என்ன செண்டிமெண்டாக இருக்குமோ? என்ற ஆராய்ச்சியில் தெரியவந்தது. விஜயின் தங்கை வித்யா சிறுவயதிலேயே தவறிவிட்டார். அவருடைய பிறந்தநாள் தேதி 14.02.1977 ஆம் இதனாலேயே தங்கையின் நினைவாக அனைத்து வாகனத்திலும் இதுபோன்ற எண்ணை வைத்து உள்ளார் எனத் தகவல் வந்துள்ளது.