திடீர் திருப்பம்… செங்கோட்டையனுடன் இணைந்த முன்னாள் அமைச்சர்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

By Nanthini on புரட்டாதி 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன. அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.

இது அதிமுகவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக அதிமுகவில் நீக்கம், மாற்றம் குறித்த அறிவிப்புகளை இபிஎஸ் ஜெயலலிதா பாணியில்  வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர் பேசுகையில், பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதிமுகவில் ஒற்றுமை இல்லாததால் கூட்டணிக்கு தேடி வருபவர்கள் கூட தற்போது வரவில்லை என கூறிய அவர், செங்கோட்டையன் விடுத்த 10 நாள் கெடு முடிந்தபின் நல்ல செய்தி வரும் என தெரிவித்துள்ளார்.