பாராட்டக்கூடிய விஷயம்..பிரசவத்திற்கு இந்திய பெண்ணுக்கு ரூ.1.26 லட்சம்..கிழக்காசிய நாட்டின் நெகிழ்ச்சி சம்பவம்..!!

By Divyamayakannan on புரட்டாதி 13, 2025

Spread the love

தென் கொரியாவில் வசிக்கும் ஒரு இந்திய பெண் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். இந்தியா மற்றும் தென்கொரியாவின் மகப்பேறு ஆதரவு அமைப்புகளுக்கும் இடையிலான ஒப்பீட்டை கூறியுள்ளார். இந்த பெண்ணின் பெயர் நேஹா அரோரா. தென் கொரியா இளைஞனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தை பிறந்தது. கர்ப்ப காலத்தில் கிடைத்த அரசாங்க ஆதரவை பற்றி கூறியுள்ளார்.

கர்ப்பம் கண்டறியப்பட்ட உடனேயே பரிசோதனை மற்றும் மருந்துகளுக்காக ரூ.63,100. பேருந்து, டாக்ஸி மற்றும் தனிப்பட்ட வாகனத்துக்கு போக்குவரத்து செலவுக்காக ரூ.44,030 வழங்கினார்களாம். பின்பு, பிரசவத்தின் போது ரூபாய் 1.26 லட்சம் மொத்தமாக கொடுத்தார்களாம். இது போதாது என்று குழந்தை பிறந்ததற்கு பிறகும் முதல் வருடத்திற்கு மாதம் மாதம் ரூ. 63,100 வழங்கினார்களாம். இரண்டாவது வருடத்தில் ரூ. 31,000 மற்றும் இரண்டு வயது முதல் 8 வயது வரை மாதத்திற்கு ரூ.12,000 வழங்கினார்களாம்.

   

 

   

 

View this post on Instagram

 

A post shared by Neha Arora (@mylovefromkorea17)