ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டு, புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும், கடைசி மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த சிஎஸ்கே, இடைப்பட்ட 8 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்று 12 புள்ளிகளுடன் சீசனை முடித்தது. இந்த மோசமான நிலைக்குக் காரணம், சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி இந்த சீசனின் ஒரு போட்டியில் கூட விளையாடாததுதான். சீசன் தொடங்குவதற்கு முன்பு அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், பின்னங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக முதல் போட்டியில் இருந்து அவர் விலகினார்.
இருப்பினும், தசைப்பிடிப்புப் பிரச்சினை முற்றிலும் குணமடைந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட பிறகும் தோனி ஏன் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே வலுவாக எழுந்துள்ளது. குறிப்பாக, அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சர்பராஸ் கான், கார்த்திக் சர்மா, ஷிவம் துபே ஆகியோர் தொடர்ந்து சொதப்பியபோதும் தோனி விளையாட வராதது பெரும் மர்மமாக இருந்தது. தற்போது இதற்குப் பின்னணியில் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் தோனிக்கும் இடையே ஏற்பட்ட அதிருப்திதான் காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2026 டிரேடிங்கின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை வாங்குவதற்காக, சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகிய இருவரையும் நிர்வாகம் கொடுத்துள்ளது.
அணியின் முக்கிய தூணாக விளங்கிய ரவீந்திர ஜடேஜாவை டிரேடிங் மூலம் வெளியேற்றுவதில் தோனிக்குத் துளியும் உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், தோனியின் எதிர்ப்பையும் மீறி சிஎஸ்கே நிர்வாகம் இந்த டிரேடிங் முடிவை எடுத்ததால், அவர் கடும் அதிருப்தி அடைந்து போட்டிகளில் விளையாடாமல் புறக்கணித்ததாகத் தெரிகிறது. இந்த மோதல் காரணமாக, ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சிஎஸ்கே அணியின் ஆலோசகராகவோ அல்லது பயிற்சியாளராகவோ தோனி செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது எழுந்துள்ள மனக்கசப்பால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து முற்றிலும் விலக முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு…
தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…
பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது விவசாயி அந்தோணி ராஜ், தனது வீட்டின்…
ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து…
வெப்ப அலை மற்றும் கடுமையான கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது குறித்து அரசு பரிசீலிப்பது மிகவும் வரவேற்கத்தக்க,…