Categories: சினிமா

சன் பிக்சர்ஸ் கேட்டும் மறுத்துவிட்டார்… அதுதான் வெற்றிமாறன்… வாடிவாசல் குறித்து சிலாகிக்கும் தயாரிப்பாளர் தாணு!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். தற்போது விடுதலை -2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் நான்கு ஆண்டுகளாக உருவாக்கி வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய அளவில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள பல நடிகர்களின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இதையடுத்து அவர் நீண்டகாலமாகக் காத்திருக்கும் வாடிவாசல் படத்தைத் தொடங்குவார் என தெரிகிறது. இந்த படத்தில் சூர்யா, அமீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஜி வி பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் இங்கிலாந்தில் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் தாணு “இயக்குனர் வெற்றிமாறனை பல முன்னணிக் கதாநாயர்கள் அழைத்துப் படம் பண்ணலாம் என்றார்கள். பல தயாரிப்பு நிறுவனங்கள் ஏன் சன் பிக்சர்ஸ் கூட  அழைத்தார்கள். ஆனால் அவர் ‘வாடிவாசல்’ படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டார். அந்த அளவுக்கு வார்த்தை சுத்தம் உள்ளவர் வெற்றிமாறன்.” எனப் பாராட்டியுள்ளார்.

வாடிவாசல் என்ற நாவலில் உந்துதல் பெற்று வெற்றிமாறன் மூன்று பாகங்களாக இதற்கு திரைக்கதை எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது.

vinoth

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

6 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

6 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

7 மணத்தியாலங்கள் ago