விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தங்கமகள். இதில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி, அஸ்வினி ஆனந்தா, ஜீவிதா கிருஷ்ணன், காயத்ரி ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியல் ஆனது திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் மூன்று மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் 200 எபிசோடுகளுக்கு மேல் இந்த சீரியல் ஒளிபரப்பான நிலையில் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது இந்த சீரியல் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்டு 200 எபிசோடுகளை மட்டுமே கடந்த நிலையில் சீரியல் முடிவடைய இருக்கும் செய்தியானது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சமீபத்தில் பொன்னி சீரியல் முடிவடைந்ததை அடுத்து தற்போது அடுத்தடுத்து சீரியல்களை முடித்து புதிய சீரியல்களை ஒளிபரப்பு விஜய் டிவி திட்டமிட்டுள்ளது.
