குஜராத் மாநில அகமதாபாத்தில் நேற்று முன்தினம் 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் திடீரென்று அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் குஜராத் மாநில முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபாணி உட்பட 241 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் விமானம் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் Mid Day வெளியிட்ட விளம்பரம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் போலவே இருந்தது தெரியவந்துள்ளது. அந்த விளம்பரத்தில் ஏர் இந்தியா நிறுவன விமானமே பயன்படுத்தப்பட்டிருந்தது. எதார்த்தமாக காலை வெளியான நாளிதழில் அந்த விளம்பரம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் நண்பகல் வேளையில் நிதர்சனத்தில் அதனைப் போலவே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
