சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆயிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அங்கு தனது திறமையான விளையாட்டால் சில நாட்கள் தாக்கு பிடித்தார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர்.

இந்த தொடரில் ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டு நடித்து மக்களை கவர்ந்தவர் தான் நடிகை ஆயிஷா. இந்த சீரியல் மூலமாக பிரபலமான இவர் அப்படியே விஜய் பக்கம் திரும்பினார். விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய இவர் 50 நாட்களுக்கும் மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். இதைத் தொடர்ந்து குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் நடிகை ஆயிஷா.

பிக் பாஸ் வீட்டில் அவர் தனது சொந்த வாழ்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதை ரகசியமாகவே வைத்திருந்தார். அவர் இரண்டு முறை விவாகரத்து பெற்றவர் என முன்னாள் காதலர் கொடுத்த பேட்டி வைரல் ஆன நிலையிலும், அது பற்றி ஆயிஷா தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. பிக்பாஸிற்கு பிறகு ஆயிஷா லோகேஷ் என்பவரை காதலிக்க நிச்சயதார்த்தமும் முடிந்தது.

அதன் பிறகு ஆயிஷா திருமணம் குறித்து எதுவும் தகவல் வெளியாகவில்லை. உப்பு புளி காரம் சீரியஸில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஆயிஷா தனி விமானத்தில் பறந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனையடுத்து பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
