வசூலை வாரி குவிக்கும் தங்கலான்.. ரிலீஸ் ஆன 4 நாட்களில் கோடிகளை குவித்து உலக அளவில் சாதனை..!!

By admin on ஆவணி 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். சேது, பிதாமகன், காசி, அந்நியன், ஐ ஆகிய படங்களில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றினார். இன்றும் அந்தப் படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. வித்தியாசமான கெட்டப் போட்டு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து சினிமாவை ஆழ் மனதில் இருந்து விரும்பி படங்களில் நடிப்பவர் விக்ரம்.

தங்கலான் ஊடக விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? - BBC News தமிழ்

   

அப்படி வித்தியாசமான கெட்டப் மற்றும் கதைக்களம் கொண்ட தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இந்த நிலையில் பிரபல இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தார்.

   

தங்கலான்' படத்திற்கு குவியும் பாராட்டுகள், திரைச்செய்தி - தமிழ் முரசு  Cinema/Movie news in Tamil, Tamil Murasu

 

கே.ஜி.எப் எனப்படும் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கலான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். மேலும் பசுபதி, மாளவிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தில் விக்ரமின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது.

விரைவில் 'தங்கலான் 2' - நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் விக்ரம் உறுதி! |  Chiyaan Vikram announces Thangalaan Part 2 - hindutamil.in

உலக அளவில் தங்கலான் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த நிலையில் தங்கலான் திரைப்படம் நான்கு நாட்களில் உலக அளவில் 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கலான் முன்னோட்டம் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்தது