TVS குடும்பத்தின் முதன்மையான நிறுவனம் தான் TVS மோட்டார் நிறுவனம். இது இந்தியாவின் மூன்றாவது பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாகும். இந்த நிறுவனம் TVS 50 முதல் ரேஸ் மோட்டார் சைக்கிள்கள் வரை பலதரப்பட்ட இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் இந்த நிறுவனம் எதிலிருந்து ஆரம்பித்தது மற்றும் பிரபலமான TVS நிறுவனத்தின் வரலாறு என்ன என்பதை இனிக் காண்போம்.

#image_title
TVS நிறுவனத்தின் தலைவர் டி வி சுந்தரம் ஐயங்கார் ஆவார். இவர் 1911 ஆம் ஆண்டு முதலில் மதுரையில் பேருந்து சேவையை தான் தொடங்கினார். மதுரையில் முதல் பேருந்து சேவையை தொடங்கிய டிவிஎஸ் திருக்குறுங்குடி சுந்தரம் தெற்கு ரோடுவேஸ் லிமிடெட் என்ற பெயரில் ஒரு பெரிய லாரிகள் மற்றும் பேருந்துகளுடன் போக்குவரத்து வணிகத்தில் டிவிஎஸ் சுந்தரம் ஐயங்கார் மற்றும் சன் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவினார் 1955 ஆம் ஆண்டில் டிவி சுந்தரம் இறந்தபோது நிதி, காப்பீடு, இருசக்கர வாகனங்கள், முச்சக்கர வாகனங்கள், டயர்கள் மற்றும் கூறுகள், வீட்டு வசதி, விமான போக்குவரத்து தளவாடங்கள் உள்ளிட்ட ஆட்டோமொபைல் துறையில் பல துறைகளுடன் அவரது மகன்கள் நிறுவனத்தை முன்னேற்றினர்.
TVS குழும நிறுவனத்தின் சுந்தரம் கிளைட்டன் லிமிடெட் டிவிஎஸ் 50 முபட்டுகளை தயாரிக்க தொடங்கியது. 1980 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் இரண்டு இருக்கைகளை கொண்ட மோட்டார் சைக்கிளை தயாரித்தது TVS நிறுவனம் தான். TVS 50 என்ற பெயரில் இந்த மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு வந்தன.
அதன் பிறகு TVS 50 ஆனது மிக பிரபலம் அடைந்தது. பின்னர் 2015 ஆம் ஆண்டு உலகின் மிக நீளமான டக்கர் ரேலியில் பங்கேற்ற முதல் தொழிற்சாலை குழுவாக TVS பெயர் பெற்றது. TVS ரேசிங் பிரெஞ்சு மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளரான ஹெர்கோவுடன் கைகோர்த்து அந்த அணிக்கு செல் கோ டிவிஎஸ் ஃபேக்டரி டீம் என்று பெயரிட்டது. அதற்குப் பிறகு நடைபெற்ற பந்தயத்தில் டிவிஎஸ் ரேசிங் தான் 90% பந்தயங்களில் வெற்றி பெறும் டீமாக இருந்தது.
2004 ஆம் ஆண்டு டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ஐ அறிமுகப்படுத்தியது இந்நிறுவனம். 2016 ஆம் ஆண்டு TVS BMW ஜி 310r ஐ உற்பத்தி செய்ய தொடங்கியது. இது பிஎம்டபிள்யூ மோட்டார் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட புதுவித மோட்டார் சைக்கிள் ஆகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2018 இல் தனது ஐம்பதாவது BMW யூனிட்டை வெளியிட்டது TVS நிறுவனம்.

#image_title
இடையில் 2017 ஆம் ஆண்டு டி வி எஸ் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அப்பாச்சி ஆர்.ஆர் 310 சென்னையில் அறிமுகப்படுத்தியது. BMW உடன் இணைந்து உருவாக்கப்பட்ட என்ஜின் உடன் கூடிய 310cc மோட்டார் சைக்கிள் மற்ற பைக்குகளுக்கு போட்டியாக வந்த இறங்கியது.
தவிர 2020 ஆம் ஆண்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நார்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை 150 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாகவும் தகவல் வந்துள்ளது. அதன் தொழில்நுட்பத்தை இணைத்து புதிய வகை பைக்குகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது. தங்களது விடா முயற்சி மற்றும் கடின உழைப்பினால் டிவிஎஸ் நிறுவனத்தை பன்மடங்காக பெருக்கிய டிவி சுந்தரமய்யங்காரின் மகன்களுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டது. தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக வணிகமயமாகியதற்கான தேசிய விருது, மோட்டார் டெமிங் அப்ளிகேஷன் விருது, புதுமையான நெட்வொர்க்கர் விருது, டீம் டெக் சிறப்பு விருது ஆகியவற்றை வென்று இன்றளவும் TVS என்றால் நம்பகத்தமான கம்பெனி என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
