என் பேரை கெடுத்துட்டாங்க, 5 கோடி நஷ்ட ஈடு வேணும்.. அறிக்கை வெளியிட்ட மியூசிக் டைரக்டர் யுவன்..!!

By admin on ஆவணி 19, 2024

Spread the love

சினிமாவின் முன்னணி இயக்குனரான யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் ஜமீலா என்பவருக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் ஜமீலாவின் சகோதரர் முகமது ஜாவித் என்பவர் யுவன் சங்கர் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, மாத வாடகை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், அட்வான்ஸ் 12 லட்சம் ரூபாய் என அக்ரிமெண்ட் போடப்பட்டிருக்கிறது.

   

சமீபத்தில் தான் மாத வாடகை 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா 20 லட்ச ரூபாய் வாடகை பாக்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது குறித்து செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டாலும் சரியாக பதில் கூறவில்லை. மேலும் எந்த தகவலும் கூறாமல் யுவன் சங்கர் ராஜா பணம் கொடுக்காமல் வீட்டை காலி செய்ய முயற்சி செய்து வருகிறார்.

   

 

பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் சொல்லித்தான் அந்த விஷயமே எங்களுக்கு தெரியும். எனவே விசாரணை நடத்தி வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீடு பெற்று தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தன்னை பற்றி அவதூறாக செய்தி பரப்பியதற்காக வீட்டின் உரிமையாளர் ஜமீலாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் பல ஆண்டுகளாக பிரபல இசையமைப்பாளராக இருக்கும் தன்னை பற்றி அவதூறாக டிவி மற்றும் யூடியூப் சேனலுக்கு ஜமீலா பேட்டியளித்துள்ளார். இது தனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தனது பெயரை கெடுத்து விட்டார்கள். எனவே 5 கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும் என யுவன் சங்கர் ராஜா அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்சனையை உரிமையியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் சந்திக்க தயாராக இருப்பதாக நோட்டீஸில் யுவன் சங்கர் ராஜா குறிப்பிட்டுள்ளார்.

#image_title