CINEMA
தங்கலான் சக்சஸ் மீட்டில் தடபுடலாக விருந்து.. உணவு பரிமாறும் சீயான் விக்ரம்.. வைரலாகும் வீடியோ..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். சேது, பிதாமகன், காசி, அந்நியன், ஐ ஆகிய படங்களில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்புகளில் தோன்றினார். இன்றும் அந்தப் படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. வித்தியாசமான கெட்டப் போட்டு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து சினிமாவை ஆழ் மனதில் இருந்து விரும்பி படங்களில் நடிப்பவர் விக்ரம்.
அப்படி வித்தியாசமான கெட்டப் மற்றும் கதைக்களம் கொண்ட தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இந்த நிலையில் பிரபல இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் திரைப்படம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தார்.
கே.ஜி.எப் எனப்படும் கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கலான் திரைப்படம் இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். மேலும் பசுபதி, மாளவிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தில் விக்ரமின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது.
தங்கலான் திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பட்டையை கிளப்புகிறது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தங்கலான் திரைப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதற்காக அனைவருக்கும் விருந்து ரெடியாக இருந்தது. இந்த நிலையில் சீயான் விக்ரம் படக்குழுவினருக்கு விருந்து சாப்பாட்டை பரிமாறி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
#Thangalaan success meet
A @chiyaan treat 🥳 pic.twitter.com/nFoFtL7FAA
— Kalaiarasan 𝕏 (@ikalaiarasan) August 27, 2024