CINEMA
“சும்மா வாட்டமா இருக்கிறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி”.. தோழியுடன் வேற லெவலில் ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் சம்யுக்தா..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சம்யுக்தா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு மாடல் அழகியாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். இதனை தொடர்ந்து பல்வேறு விளம்பர திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வந்த இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வந்த விஜே பாவனாவின் நெருங்கிய தோழி தான் சம்யுக்தா. இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் கார்த்திக் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டு துபாயில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். இதனை தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் கணவரின் நடவடிக்கை சரியில்லாததால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
இதனைத் தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் மூலமாக அவருக்கு மிகப்பெரிய அடையாளமும் கிடைத்தது. இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவரும் நிலையில் மறுபக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தினமும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வரும் சம்யுக்தா தற்போது ராயன் படத்தில் இடம்பெற்ற வாட்டர் பாக்கெட் மூஞ்சி பாடலுக்கு தனது தோழி பாவனாவுடன் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க