தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் தான் நடிகர் டி ஆர் ராஜேந்திரன். இவரைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவருடைய படைப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதன்படி டி ராஜேந்திரன் கதை எழுதி இசை அமைத்தே வெளியாகி இருந்த திரைப்படம் தான் ஒரு தலை ராகம்.

இந்த திரைப்படம் 1980 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவு வெற்றி கொடுத்தது. திரையரங்கில் இந்த படம் சுமார் 365 நாட்கள் ஓடி இருந்தது. இந்தப் படத்தில் சங்கர், ரூபா மற்றும் சந்திரசேகர் உட்பட பலரும் நடித்திருந்தனர். 1999 ஆம் ஆண்டு தெலுங்கிலும் இந்த திரைப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள்.

இந்த திரைப்படம் வெளியாகி 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ஒரு தலை ராகம் திரைப்படம் குறித்து பலரும் அறியாத ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது ஒரு தலை ராகம் படத்தை இயக்கியது டி ராஜேந்தர் என்பதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அதில் இயக்கத்தில் இப்ராஹிம் என போடப்பட்டிருக்கும்.

இது குறித்து தந்து Youtube சேனலில் உண்மையை உடைத்துள்ள பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சித்ரா லக்ஷ்மணன் , ஒரு தலை காதல் காலத்தில் மட்டுமல்ல இன்றும் இது போன்ற சம்பவங்கள் சினிமாவில் நடந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. ஒரு தலை ராகம் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் சிலர் இன்னும் உள்ளனர். அவர்களிடம் விசாரித்தால் உண்மையிலேயே இந்த படத்தை இயக்கியது யார் என தெரியவரும் என அவர் கூறியிருப்பது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
