CINEMA
“போன் வந்ததும் கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன்”.. வீடியோ வெளியிட்டு மக்களை எச்சரித்த நடிகை சனம் ஷெட்டி..!
மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய நடிகை சனம் செட்டி 2012 ஆம் ஆண்டு வெளியான அம்புலி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், செல்வந்தன், கதகளி மற்றும் வால்டர் போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தர்ஷனை காதலித்ததாகவும் இருவருக்கும் இடையே ரகசிய நிச்சயதார்த்தமும் நடந்தது.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் தன்னை சுத்தமாக கண்டு கொள்வதே இல்லை என்று மீடியாக்கள் முன்பு சனம் செட்டி குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். தற்போது வனிதா விஜயகுமார் போல பிக் பாஸ் சீசன் கடை ரிவ்யூ செய்து வந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை சனம் செட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி தன்னிடம் மோசடி செய்ய முயற்சி செய்ததாக கூறியுள்ள அவர் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
தனக்கு வந்த ஃபோன் காலில், நாங்கள் செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனத்திலிருந்து பேசுகிறோம். நீங்கள் மும்பையில் ஒரு சிம் கார்டு வாங்கியுள்ளீர்கள். இந்த நம்பரில் இருந்து பலருக்கும் அழைப்புகள் சென்றுள்ளது. உங்கள் நம்பர் இன்னும் சில நாட்களில் டீஆக்டிவேட் செய்யப்படும். அப்படி நடக்க கூடாது என்றால் நாங்கள் கேட்கும் தகவல்களை நீங்கள் கூறுங்கள் என்று பேசி உள்ளனர். உடனே எச்சரித்த சனம் செட்டி நம் விவரங்கள் அனைத்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் ஏற்கனவே இருக்குமே, ஆனால் தற்போது இவர்கள் ஏன் தனிப்பட்ட விவரங்களை கேட்கிறார்கள் என்று எச்சரித்து அந்த அழைப்பை துண்டித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க