பா ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல் போன்றோர் முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
ஸ்டுடியோ க்ரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. 150 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. தங்க சுரங்கத்தை ஆக்கிரமிக்க வரும் ஆங்கிலேயர்களை எதிர்க்கும் பழங்குடியின மக்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றியிருந்தார்.
படம் வெளியான பின்னர் நல்ல விமர்சனங்களை பெற்றது. விக்ரமின் நடிப்பிற்காக வெகுவாக பாராட்டப்பட்டார். தமிழ்நாட்டை விட வட மாநிலங்களில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இது விக்ரமின் 61 வது படம் ஆகும். இந்த படத்திற்காக கடுமையாக விக்ரம் உழைத்ததாக பட குழுவினர் தெரிவித்திருந்தனர். 1850 காலகட்டத்தில் நடப்பதாக படம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் என்று கூறப்பட்டு வந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் தங்கலான் படத்தை பற்றி சர்ச்சையான விமர்சனத்தை கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் தங்கலான் படம் 100 கோடி எல்லாம் வசூல் செய்யவில்லை. இது தோல்வி படம்தான். தயாரிப்பாளருக்கு இந்த படத்தின் மூலம் 20 கோடி நஷ்டம் என்று உண்மையை போட்டு உடைத்து பேசியிருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.