தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்தவர் MGR. நடிகராக மட்டுமல்லாமல் முதலமைச்சராக தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தவர் MGR. தான் இறக்கும் வரையில் முதலமைச்சர் பதவியில் இருந்தவர். குடும்ப வறுமைக்காக வழியில்லாமல் நாடகத்தில் நடிக்க வந்த MGR பின்னர் சினிமாவில் துணை நடிகராக நடிக்க ஆரம்பித்து பத்து வருடங்கள் போராடி பின்பு நடிகராக நடிக்க ஆரம்பித்தார்.
நடிகராக நடிக்க ஆரம்பித்த பின்பு இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டுதான். இவருடன் பணியாற்ற இயக்குனர்களும் நடிகைகளும் போட்டி போட்டு வருவர். இவருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தவர் MGR.
மக்கள் MGR ஐ மிகவும் நேசித்தனர். அதேபோல் MGR மக்களை அதிகமாக நேசித்தார். இது அவருக்கு இயல்பாகவே இருந்துள்ளது என்பதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது. அது என்னவென்று இனி காண்போம்.
MGR உடன் அவரது சகோதரர் எம் ஜி சக்கரபானியும் இணைந்து தான் நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சினிமாவில் நுழைந்தனர். பத்து வருட போராட்டத்திற்கு பிறகு MGRக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு சம்பளமாக 25 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். வீட்டிற்கு வந்ததும் MGR தனது தாயாரிடம் சிறிய தொகை மட்டுமே கொடுத்திருக்கிறார்.
பின்னர் MGRரின் சகோதரரான எம் ஜி சக்கரபாணி தனது தாயாரிடம் அம்மா MGR உங்களிடம் எவ்வளவு சம்பளம் கொடுத்தான் என்று கேட்டு இருக்கிறார். MGRரின் தாயாரும் பத்து ரூபாய் கொடுத்தான் என்று கூறி இருக்கிறார். உடனே எம் ஜி சக்கரபாணி 25 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள் அம்மா மீதி பணம் என்ன ஆயிற்று என்று அவனிடம் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். பிறகு வந்த MGR இடம் அவரது தாயார் மீதி பணத்தை எங்கே என்று கேட்டபோது நான் வரும் வழியில் பஸ் ஸ்டாண்டில் ஒரு வயதான அம்மா வயது வந்த இரண்டு பெண் ஒரு சிறுவனை வைத்து செய்வதெரியாது இருந்தார்கள். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று 15 ரூபாயை கொடுத்துவிட்டு வந்தேன் என்று கூறி இருக்கிறார். இதைக் கேட்ட புரட்சித்தலைவரின் தாயார் அவரை மனமகிழ்ந்து பாராட்டி இருக்கிறார்.