தவறு செய்த கார் டிரைவருக்கு சம்பளத்தை உயர்த்திய கலைவாணர் NSK… காரணம் தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க…

By Meena on அக்டோபர் 1, 2024

Spread the love

கலைவாணர் NSK என்று அழைக்கப்படும் என் எஸ் கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். சிறு வயதிலிருந்தே சினிமாவில் கால் பதித்து விட வேண்டும் என்று விரும்பினார். NSK ஆரம்பத்தில் நாடக கொட்டாயில் சோடா விற்கும் சிறுவனாக தனது திரை வாழ்க்கையை இளமை பருத்தில் தொடங்கினார் என் எஸ் கே.

   

பின்னர் வில்லுப்பாட்டு கலைஞராக தனது கலை உலக வாழ்க்கை தொடங்கினார். பிறகு நாடகத் துறையில் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். சொந்தமாக நாடக கம்பெனி நடத்தினார் NSK. அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலம் அடைந்தது. நாடகத்தில் நடித்த அனுபவத்தின் மூலமாக திரையுலகில் நுழைந்து நகைச்சுவை நடிகராக வலம் வந்தார் NSK. 1936 ஆம் ஆண்டு வெளிவந்த சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் NSK .

   

நகைச்சுவை வசனங்களை தானே எழுதி அதை திரைப்படங்களில் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் NSK .அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த NSK 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் அறிவும் சாதுர்யாமும் நிறைந்தவர் என்பதற்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

 

ஒருமுறை NSK தானது மனைவி மதுரத்துடன் தனது கார் டிரைவரை கூட்டிக்கொண்டு மதுரைக்கு பயணம் செய்தார். அப்போது நடு இரவில் சற்று காற்று வாங்கலாம் என்று காரை நிப்பாட்ட சொல்லி வெளியே இறங்கி நின்றிருந்தனர். அப்போது எதிர்பாரா விடமாக காற்றினால் காரின் கதவு மூடப்பட்டது. உடனே இவர்கள்தான் ஏறி விட்டார்கள் என்று கார் டிரைவர் வண்டி ஓட்ட ஆரம்பித்துவிட்டார். உடனே NSK மனைவி மதுரம் திட்ட ஆரம்பித்திருக்கிறார்.

அந்த நேரத்தில் NSK அமைதியாக இருந்து கொண்டு அவர் வருவார் என்று கூறி இருக்கிறார். அப்படியே திரும்பி வந்த கார் டிரைவர் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். இருந்தாலும் விடாமல் மதுரம் திட்டிக் கொண்டே இருந்திருக்கிறார். மறுநாள் கார் டிரைவர் மன்னிப்பு கேட்கும் போது கலைவாணர் NSK அவருக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுத்து இருக்கிறார்.

அதற்கு காரணம் என்ன என்று அவரது உதவியாளர் கேட்கும் பொழுது காரில் பின்னாடி கணவனும் மனைவியும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பல விஷயமாக பேசுவார்கள் அதை நாம் கவனிக்க கூடாது நாம் வந்த வேலை மட்டும் பார்க்க வேண்டும் என்று தான் டிரைவர் திரும்பி கூட பார்க்காமல் காற்றினால் கதவு அடைத்ததற்கு நாங்கள் தான் ஏறிவிட்டோம் என்று நினைத்து அவர் வேலையை கரெக்டாக செய்திருக்கிறார். அதற்காகத்தான் இந்த சம்பள உயர்வு என்று கூறியிருக்கிறார் கலைவாணர் NSK. இதை கேட்ட அவரது உதவியாளர் இவரது அறிவு சாதுர்யாத்தை கண்டு பாராட்டி இருக்கிறார்.