ஒரே படத்தில் ஏறிய மவுசு… பெரிய பட்ஜெட் படங்களில் இணையும் மாரி செல்வராஜ்…

By Meena on அக்டோபர் 1, 2024

Spread the love

மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர். ஆனந்த விகடனில் மறக்க நினைக்கிறேன் என்ற தொடரை எழுதியவர். சில வருடங்களாக பத்திரிகையாளராக பணிபுரிந்தார் மாரி செல்வராஜ்.

   

பின்னர் இயக்குனர் ராமிடம் 10 வருடங்களுக்கு மேலாக உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்றார் மாரி செல்வராஜ்.

   

அடுத்ததாக கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த ஆண்டு இவர் இயக்கி வெளியான வாழை திரைப்படம் சிறந்த விமர்சனங்களை மக்களிடம் பெற்றிருக்கிறது. அனைத்து பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றது. இதன் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்று முன்னணி இயக்குனர்கள் வரிசையில் வந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

 

வாழை திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததால் பல பெரிய பட்ஜெட் பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகிறது. இதைப்பற்றி ஒரு நேர்காணலில் கூறி இருக்கிறார் மாரி செல்வராஜ். அவர் கூறியது என்னவென்றால், தற்போது பைசன் திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தனுசுடன் மீண்டும் இணைந்து வரலாற்று கதை கொண்ட படத்தை இயக்கவிருக்கிறேன். அதற்கு அடுத்ததாக ரஜினிகாந்த் அவர்களுடன் பணம் பண்ணுவதற்காக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் மாரி செல்வராஜ்.