இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தமிழ் சினிமாவை உலகறிய செய்தவர். பல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். சென்னையில் பிறந்து வளர்ந்த ஏ ஆர் ரகுமானின் இயற்பெயர் திலீப் குமார் என்பதாகும். பின்னர் இவர் இஸ்லாம் மதத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார் ஏ ஆர் ரகுமான்.
தனது தந்தை இறந்ததற்கு பிறகு குடும்பத்தின் வருமானத்திற்காக இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அதற்கு வந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம், கிதார் ஆகியவற்றை வாசிக்க கற்றுக்கொண்டார். மேற்கத்திய இசை கருவிகளை கையாளும் திறனை மாஸ்டர் தன்ராஜ் இடம் பயின்றார் ஏ ஆர் ரகுமான். எம் எஸ் விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி இருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.
1992 ஆம் ஆண்டு ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ ஆர் ரகுமான். முதல் படத்தின் மூலமாகவே சிறந்த இமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார். தமிழ் மட்டுமல்லாது இந்தி ஆங்கிலம் போன்ற பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரகுமான்.
தனது அபாரமான இசையமைப்பிற்காக ஆஸ்கார் விருது, கோல்டன் குலோப் விருது, தேசிய திரைப்பட விருது போன்ற விருதுகளை வென்றவர். ஹாலிவுட் திரைப்படமான சிலம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக ஆஸ்கார் விருதினை வென்றார். 2010 ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது. இவரை ஆசியாவின் மெர்ச்சர்ட் என்று அன்போடு மக்கள் அழைக்கின்றனர்.
ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஏ ஆர் ரகுமான் தற்போதைய சினிமா பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், இப்போதையா படங்கள் எல்லாம் சாதி சார்ந்து வருகிறது. அது இனிவரும் சமுதாயத்திற்கு தேவையில்லை. இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் அறிவியல் சார்ந்த கதை அம்சம் கொண்ட படங்கள்தான் இனி தேவை என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.